வெட்கப் படவேண்டியவர்கள் தொலைக்காட்சியும், பத்திரிகையும் தான் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் அல்ல…
மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து இயற்கையாக உருவாக்கப்பட்டவை பசி,தாகம்,தூக்கம்,வலி,உணர்வுகள்,உடல் உறவு போன்றவைகள், மற்ற அனைத்தும் கடவுள் உட்பட மனிதனால் தன் தேவை,பயம்,ஆசை,சுயநலம் போன்றவைகளுக்காக உருவாக்கப்பட்டவையே.
ஆன்மிகம் ஒரு காலகட்டத்தில் வாழ்கைக்கான அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது.பின்பு வந்த அறிவியல் அதனை தகற்த்தது. உலகம் உருண்டை என்று ஆணித்தறமாக நாம் இப்போது எந்தளவு நம்புகிறோமோ அதே அளவு நம்பிக்கை உலகம் சதுரமானது, பாய் போன்று நீளமானது என்று நம்பப்பட்டது. இரண்டிற்கும் காரணம் ஆன்மிகம்-அறிவியல். வருங்காலத்தில் வேறு ஒன்று தோன்றி இரண்டுமே உண்மையில்லை என சொல்லலாம் அதையும் வரும் தலைமுறை நம்பலாம் நாம் அப்போது முட்டாளாகலாம்.பழைய தலைமுறை, நடப்பு தலைமுறை வரும் தலைமுறைகளின் வாழ்கை சூழலுக்கு ஏற்ப மாறும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையே.
இன்று ஆன்மிகம் என்பது தெளிவான வியாபாரமே, ஒருவனது துயரத்தை காதுகொடுத்து கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதே எவ்வளவு ஆறுதல்.துயரத்தில் வரும் ஒருவனுக்கு மனநிம்மதியை தறுகிறது என்றால் அதற்காக கட்டணம் பெறுவதும்,தறுவதும் தவறில்லையே. இவ்வாறு பெற்ற பணத்தை ஏழைகளின் முண்னேற்றத்திற்காக மருத்துவமனை, கல்வி, சாலைகள், தானங்கள் தருவதில் நன்மையே.
மருத்துவராக இருப்பவர் நோயாளிகளுக்கு தரும் மருந்துகளை அவரும் எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே. ஒருவர் தான் செய்யும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார என்பதை பார்க்கவேண்டுமே தவிர அவரது சொந்த இயற்கையான உணர்வுகளை பார்த்து தீயவன் என்பதில் என்ன நியாயம் ?
நித்தியானந்தா என்ற ஒரு ஆணும், ரஞ்சிதா என்ற பெண்னும் தங்களது சுய விருப்பத்துடன் உடல் உறவு கொல்வதில் என்ன தவறு ?
இவ்வாறாக நடந்த உறவை தொலைக்காட்சியின் மூலமும் பத்திரிகையின் மூலமும் வெளியிட்டதே தவறு….இது தொடர்ந்தால் ஒரு கணவனும் மனைவியும் உடல் உறவு கொண்ட காட்சி என வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை…..
நல்ல சிந்தனை
ReplyDeleteஇதுக்குத்தான் நம் முன்னோர்கள், நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்று சொன்னார்கள்
அது தவறில்லை என்றால் ஏன் ஓடி ஒளியவேண்டும். வெளிப்படையாக கேட்கவேண்டியதானே, நான் என்ன தப்பு செய்தேன் என்று.
ReplyDeleteஅடுத்தவருக்கு உபதேசம் செய்ததுதான் தப்பு.
அவர் செய்தது சட்டப்படி தவறு இல்லை, தர்மப்படிதான் தவறு.