
இன்றைய செய்திதாள்களில்கூட திருமணமான பெண் தன் பழைய காதலனுடன் சென்றதால் சமாதானம் பேச அழைத்து காதலனை வெட்டி கொன்றதோடு அவளையும் கொல்ல முயன்றனர் அவளின் தந்தை மற்றும் சகோதரர்கள் என்ற செய்தியும் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற மனைவியை திரும்ப அழைத்து வந்த கணவன் அவளை கொன்றதோடு எரித்தும் இருக்கிறார் என்ற செய்தியும் இடம் பிடித்து இருக்கிறது,இது போன்ற செய்திகள் நாள் தவறாமல் வரத்தான் செய்கிறது…இது எல்லா மட்டத்திலும் கொலைகளாகவும் தற்கொலைகளாகவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
தன் பழைய காதலனுடன் சென்றதற்கு யார் காரணம் கொலை செய்த அதே பெற்றோர்கள்தானே காரணமாக இருக்கமுடியும்.அவளை முதலிலேயெ காதலனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் அவள் ஏன் திருமணமான பிறகு ஒடப்போகிறாள்? அவள் விரும்பிய வாழ்க்கையை தர மறுத்தது எது ? ஜாதியா?குடும்ப பகையா ? கவுரவமா…? யாருக்காக இதனைப்பார்க்கிறிர்கள் உங்களுக்காகவா? அல்லது சுற்றி இருப்பவர்கள் உங்களைப்பற்றி நினப்பதாக நீங்களே நினைத்துக்கொள்ளும் கற்பனைக்காகவா? எதுவாக இருந்தாலும் முதலில் அவளின் ஆசையக் கொன்று பின்பு அவளின் வாழ்க்கையையும் கொன்று இறுதியாக காதலனையும் கொன்று சற்று தாமதித்திருந்தால் அவளையும் கொன்றிருப்பிற்கள், யோசித்துப்பாருங்கள் அவளை வாழப் பெற்றிர்களா ? கொலைசெய்து நீங்ளும் உங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்ள பெற்றீர்களா?
அடுத்து வேறுஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற பெண்னை கொன்ற கணவன் – அவளை வைத்து சரியாக குடும்பம் நடத்தி இருந்தால் அவள் ஏன் ஒடிப்போகப்போகிறாள், சரியான மரியாதையையும் ,சாப்பாட்டையையும்,உடலுறவையும் அவளுக்கு தந்திருக்கப்பட்டிருக்குமா? கிடைக்காதபோது கிடைக்கும் இடத்துக்கு செல்கிறாள்.உன்னால் ஒழுங்காக தரப்பட முடியாததை இன்னொருவம் தரக்கூடாது என்ற மனோபாவம் எதைக்காட்டுகிறது ? அவளின் பக்கம் இருந்து மனப்போரட்டத்தையும் உணர்வுகளையும் பார்த்திருந்தால் அவள் எவ்வளவு பாவம் என்று புரிந்திருக்கும்.பிடிக்கவில்லை என்று தானே விட்டு சென்றால் அவளை அழைத்து வந்து கொன்றது எவ்வளவு குரூரம்.கொலைக்குற்றத்தில் சிக்கி அவனும் சீரழிந்தானே.
அவளின் விருப்பத்தை சகித்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் ஆனால் கொலையோ தற்கொலையோ செய்து வாழ்வை தொலைத்து விடாதிர்கள்,நாம் காட்டுமிராண்டிகள் அல்ல யோசித்து அறிந்துகொள்பவர்கள்.
திருமணம் என்பது என்ன பிறவியா ஒருமுறை மட்டும் நிகழ்வதற்கு, அது ஒரு சம்பவம் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து சென்று வேறு பிடித்தமான வாழ்க்கையை அமைத்துகொண்டு நிறைவாக வாழ்வதை விட்டு இறக்கவைத்து இறந்து என்ன செய்யப்போகிறோம்...

